ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய பிரதான சாலைகள்

செங்கல்பட்டு, ஜன.24:  செங்கல்பட்டு,  கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதலே,  போக்குவரத்து இல்லாமல், பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் மட்டுமே சென்றன. எந்த நேரமும் அதிக வாகனங்களுடன் காணப்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி வாகனங்கள் இன்றி வெறிச்சோடி  காணப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றன. காவல்துறையினர் பணியில் இல்லாத இடங்களிலும் பொதுமக்கள் ஊரடங்கிற்கு முழு ஆதரவளித்தனர்.

செங்கல்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.  பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் நடமாட்டம் இல்லாமல் பொது முடக்கத்தை வரவேற்கும் வகையில் சாலைகள் முழுவதும் காலியாக  காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் முக்கியமான சாலைகளில் 7 இடங்களில் செக் போஸ்ட் அமைத்து 500க்கும் மேற்பட்ட காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பரனூர் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. டவுன் போலீசார்  இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். கடந்த வாரம் நோய்த்தொற்று ஏற்படும் வகையில் பொது இடங்களில் சுற்றிய 264 பேர் மீது  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள் தற்போது யாரும் வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிறுக் கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் ஜன.31ம் தேதிவரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கான நேற்று காஞ்சிபுரம் நகரில் முக்கிய சாலைகளான காந்தி சாலை, நெல்லுக்கார தெரு, ராஜ வீதிகள், காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு நகர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஆனாலும் நேற்று முகூர்த்த நாள் என்பதால், ஆங்காங்கே திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்று வந்தது. எனவே, ஏராளமான பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி திருமண அழைப்பிதழ்களை காட்டியபடி வாகனங்களில் திருமண விழாவிற்கு சென்று வருவது அதிகமாக இருந்தது. இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் நடமாட்டம் உள்ள காரணத்தால் திருமண விழாவிற்கு சென்று வரும் பொதுமக்களுக்கும் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக ₹200 அபராதம் விதித்து போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Related Stories: