10 ஆண்டுகளுக்கு பிறகு அம்மையார்குப்பத்தில் முழங்கியது சங்கு

பள்ளிப்பட்டு, ஜன.24: ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் நெசவு கூடங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் வேலை செய்து வருகின்றனர்‌. தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலி எழுப்பும் சங்கு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல வருடங்களுக்கு முன் சங்கு பழுதானதால் பயன்பாடின்றி இருந்தது. இந்நிலையில், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துணை தலைவர், வார்டு உறுப்பினர்களின் பெரும் முயற்சியால் மீண்டும் சங்கு சீர்செய்யப்பட்டு நேற்று துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் சங்கு ஒலிக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயந்தி சண்முகம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகலிங்கம், மோகனாதன், ரவிக்குமார், லதா ராமசாமி, சரவணன், தேவி மணிமாறன், ஏகவள்ளி பழனி, மலர்விழி ஏகாம்பரம், விஜயன், சுப்பிரமணி, வெங்கடேசன், ஊராட்சி உதவியாளர் விஸ்வநாதன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: