×

ரங்கத்தில் பரபரப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் காதலனுடன் மாயம்


திருச்சி, ஜன. 24: ரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் இளவரசன் (50). இவரது மனைவி தவசு (47). இருவரும் தள்ளுவண்டியில் அம்மா மண்டபம் சாலையில் துணி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது மகள் சரண்யா (19). இவர் பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் செல்போன் மூலம் கல்லணை கோவிலடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பெற்றோர் வியாபாரத்திற்காக சென்ற நிலையில், வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு சரண்யா மாயமானார். இரவு வீடு திரும்பிய பெற்றோர் மகளை காணாததையும், கடிதத்தில் காதலனுடன் செல்வதாக எழுதி வைத்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரங்கம் போலீசில் தாய் தவசு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான சரண்யாவை தேடி வருகின்றனர்.

Tags : Stiral ,
× RELATED கழுத்தை அறுத்து மார்வாடி மனைவி கொலை: திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு