×

தேசிய சிந்தனை கழக முப்பெரும் விழா மாநில கமிட்டி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா


திருச்சி, ஜன. 24: தேசிய சிந்தனை கழக முப்பெரும் விழா மாநில கமிட்டி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாள் விழா இன்று காணொளி மூலம் நடைபெற்றது. திருச்சி இந்திராகாந்தி கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் முப்பெரும் விழா மாநில கமிட்டி உறுப்பினர் சந்திரசேகரன் வரவேற்புரைவழங்கினார். விஐடி நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் முப்பெரும் விழா கமிட்டி தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை உரைஆற்றினார். ஊடகவியலாளர் மற்றும் முப்பெரும் விழா மாநில கமிட்டியின் உறுப்பினர் கோதை ஜோதிலட்சுமி சிறப்புரையாற்றினார். ”தேசம் நேசித்த தலைவன்” என்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ”வாழ்க்கை வரலாறு” அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நூலை வெளியிட்டு விழா பேருரை ஆற்றினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ் இப்புத்தகத்தின் முதல்பிரதியை பெற்றுக்கொண்டார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்திராகாந்தி கல்லூரி மாணவிகள் நேதாஜி வாழ்க்கையில் நடந்த சுவாரஷ்யமான சம்பவங்களில் சில காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கி நாடகமாக நடித்து காண்பித்தனர். இவ்விழாவினை தேசிய சிந்தனைக்கழகத்தின் மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன் ஒருங்கிணைத்தார்.

Tags : Netaji Subhash Chandra Bose ,National Committee of the National Thought Society ,
× RELATED நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தேசிய...