ரங்கம் பஸ் நிலையம் அருகில் முதியவர் சடலம் மீட்பு

திருச்சி, ஜன. 24: ரங்கம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் அருகே முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக திம்மராய சமுத்திரம் விஏஓ குமார், ரங்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலை அடுத்து எஸ்ஐ ராம்குமார் மற்றும் போலீசார் சம்பவயிடம் சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

Related Stories: