×

பெருகமணி வார்டு உறுப்பினர்கள் பதவி விலகல் திடீர் வாபஸ்

திருச்சி, ஜன. 24: திருச்சி மாவட்டம் பெருகமணி ஊராட்சி தலைவராக கிருத்திகா உள்ளார். துணைத்தலைவராக மணிமேகலை என்பவர் உள்ளார். இதில் பெருகமணி ஊராட்சியில் 9 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அவ்வப்போது ஊராட்சி தலைவர் கிருத்திகாவிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், 3 மாதங்களுக்கு முன் 4வது வார்டு உறுப்பினர் சந்திரசேகர் என்பவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாக உதவி இயக்குநரை சந்தித்து கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தில், பெருகமணி ஊராட்சியில் 4வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறேன். இந்த ஊராட்சியில் துணைத்தலைவராக உள்ள மணிமேகலை என்பவரின் தவறான வழிகாட்டுதலின் பேரில் பெருகமணி ஊராட்சியில் உள்ள உறுப்பினர்கள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பதவி விலகினோம். ஆனால் தற்போது எங்கள் பதவி விலகல் கடிதத்தை திரும்ப பெற்று கொள்வதோடு மீதம் உள்ள நாட்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு அளிப்போம் என சுய நினைவோடு இந்த கடிதத்தை சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார். இதில் துணைத்தலைவராக உள்ள மணிமேகலை அதிமுகவில் இருந்து திமுக, மதிமுக, அமமுக மற்றும் தற்போது பாஜகவில் இருப்பதாகவும் வார்டு உறுப்பினர்கள் குறை கூறுகின்றனர்.

Tags : Perugamani ward ,
× RELATED அதிகாரிகள் திடீர் ஆய்வில் அதிரடி சிறைவாச ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ்