உறவினர் வீட்டில் பீரோவை திறந்து 21 சவரன், ரூ.2 லட்சம் திருடிய சலூன் கடைக்காரர் சிக்கினார்

சென்னை: திருவல்லிகேணி வெங்கடாச்சலம் 3வது தெருவை சேர்ந்த சாரதி (28), என்பவரின் வீட்டு பீரோவில் வைத்திருந்த 21 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி கொள்ளை போனது. இதுகுறித்து சாரதி அளித்த புகாரின் பேரில், ஐஸ் அவுஸ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், சாரதி குடும்பத்திற்கு அறிமுகமான சேலையூர் அடுத்த பதுவஞ்சேரியை சேர்ந்த சுமன் (23) என்பவர், சம்பவ தினத்திற்கு முதல்நாள் சாரதி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சலூன் கடை நடத்தி வரும் சுமனை பிடித்து விசாரித்தபோது, ஜூலை 17ம் தேதி சாரதியின் வீட்டிற்கு சென்று, வீட்டில் இருந்தவர்கள் அசந்த நேரத்தில் பீரோவில் வைத்திருந்த 21 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை திருடிக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சுமனை கைது செய்து அவரிடமிருந்து 21 சவரன் நகைகள் மற்றும் பணம் ரூ.1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: