×

சென்னையில் ஒருவார சோதனையில் புகையிலை பொருள் விற்ற 25 பேர் கைது

சென்னை: சென்னையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் கடந்த 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தது மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்து 25 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 488.4 கிலோ குட்கா, 3.7 கிலோ மாவா, 4 செல்போன்கள், ரூ.17,550 மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Chennai ,
× RELATED வீட்டை உடைத்து 25 சவரன் கொள்ளை