பயணிகளின் செல்போன், நகைகளை திருடிய மாஜி சிறப்பு காவல் படை வீரர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில், எஸ்ஐ பாண்டியன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 6 சவரன் நகைகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்தன. விசாரணையில் அவர், அரக்கோணத்தை சேர்ந்த முன்னாள் சிறப்பு காவல் படை வீரர் செந்தில்குமார் (40) என்பதும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் நகை, பணத்தை திருடி வந்ததும் தெரிந்தது.

மேலும், திருடிய நகை மற்றும் செல்போன்களை மூர்மார்க்கெட்டில் விற்பதற்காக வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 6 சவரன் நகைகள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். கைதான செந்தில்குமார் சிறப்பு காவல் படையில் பணிப்புரிந்தபோது பல்வேறு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருந்ததால், கடந்த 2009ம் ஆண்டு போலீஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆந்திரா, சென்னை போன்ற நகரங்களில் ரயில் பயணிகளிடம் தொடர்ந்து அவர் கைவரிசை காட்டி வந்தததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: