நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் ரயில் பாதை பராமரிப்பு பணி

நீடாமங்கலம், ஜன.24: நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடந்தது. நீடாமங்கலத்திலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்குடி செல்லும் ரயில்வே பாதை உள்ளது. இதில் நாகை-மைசூர் மற்றும் மன்னார்குடியிலிருந்து தஞ்சை செல்லும் வாகனங்களும், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருப்பதி விரைவு ரயிலும், தினந்தோறும் கோவை செம்மொழி விரைவு மற்றும் மன்னை-சென்னை விரைவு ரயிலும், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் பகத் கி கோதி ராஜஸ்தான் விரைவு ரயிலும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ரயில்வே பாதையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து பராமரிப்பு பணி தொடங்கி நேற்று பகல் முழுவதும் நடந்தது. இந்த வழியாக சென்று வந்த பஸ்கள் வேறு வழியில் மாற்றம் செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டது. பணி நடை பெறுவது தெரியாத ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அங்கு வந்தவர்கள் செல்லும் வழி தெரியாமல் அங்குள்ளவர்களை கேட்டு திரும்பி பல கி.மீ. வரை சுற்றி சென்றனர். அவர்கள் கூறுகையில், முன் கூட்டியே ரயில்வே துறை பராமரிப்பு பணி நடைபெறுவதாக ஊடகம் மற்றும் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டிருந்தால் வாகன ஓட்டிகள் அவதியுற்றிருக்க மாட்டார்கள் என அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: