×

ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப்பணிகள்

ஒரத்தநாடு, ஜன.24: ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார் கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடந்து முடிந்த, நடைபெற்றுவரும் பணிகளையும் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளையும் மத்திய ஆய்வு குழுவினர் வருகை தந்து ஆய்வு செய்தனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொய்யுண்டார்கோட்டை ஊராட்சி மன்ற கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பொதுமக்களுக்கான 100 நாள் வேலைத்திட்ட பணிகளையும் அதனை தொடர்ந்து பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் ஏழை பொதுமக்களுக்கு இலவசமாக கட்டிவரும் வீடுகளையும் ஒன்றிய அரசு குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். ஆய்வின்போது ஒரத்தநாடு ஒன்றிய துணை ஆணையர் துரை ரகுநாதன் பொய்யுண்டார் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்குமார் , மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் , பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்ட கலந்துக்கொண்டனர்.

Tags : Fort Panchayat ,Orathanadu ,
× RELATED திருவள்ளூர் அருகே 100 நாள் பணியின் போது...