ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு ஆய்வு திருப்பனந்தாளில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜன.24: கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பனந்தாள் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட குழுவை சேர்ந்த ஜீவபாரதி, சாமிக்கண்ணு, பாரதி, ஒன்றியக்குழுவை சேர்ந்த சாமிநாதன், காசிநாதன், வெற்றிச்செல்வி, நடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இதில் திருப்பனந்தாள் கடைவீதியில் காட்சிப் பொருளாக உள்ள கழிவறையை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும், பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும், திருப்பனந்தாள் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் துப்புரவு பணியாளர்கள் தினமும் துப்புரவு பணி செய்திட வேண்டும்,அனைத்து தெருக்களிலும் உள்ள சாலைகளை செப்பனிட்டு புதிய தார்சாலை அமைத்துத்தரவேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: