×

பாப்பாநாடு அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

ஒரத்தநாடு, ஜன.24: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பா நாடு கிளாமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜோதி கண்ணு (65). இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது வீட்டு காம்பவுண்டில் ஒளிந்திருந்த மர்மநபர் ஜோதி கண்ணு அணிந்திருந்த தாலி மற்றும் நகைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் அறுத்துக்கொண்டு தப்பி ஓடினான். ஜோதி கண்ணு அலறி மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் ஓடிவந்தனர். அதற்குள் மர்மநபர் தப்பிஓடி விட்டார். பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஜோதி கண்ணு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Papanadu ,
× RELATED பாப்பாநாடு எஸ்ஐ மாரடைப்பால் மரணம்: போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்