×

கந்தர்வகோட்டையில் நாட்டுக்கரும்பு அறுவடை பணி துவக்கம்


கந்தர்வகோட்டை, ஜன.24: கந்தர்வகோட்டையில் நாட்டுக்கரும்பு அறுவடை பணி துவங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தமிழக முதல்வர் அறிவித்த ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பணி தேங்கக்கூடாது என்ற அடிப்படையில் கரும்பு வெட்டும் பணி தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை அன்று குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மூடப்பட்டது. இதனால் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை கொண்டாட அனைவரும் அவரவர் ஊர்களுக்கு சென்று விட்டனர். மீண்டும் சர்க்கரை ஆலை இன்று (24ம்தேதி) திறக்க உள்ளதால் இப்பகுதியின் கரும்பு வெட்டி அதனைக் கட்டி வாகனத்தில் இயற்றும் பணி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நாள் ஒன்றுக்கு 20 டன் அரவை திறன் கொண்டது என்பதால் இப்பகுதியில் உள்ள ஆலைக் கரும்புகளை வெட்டி, கத்தையாக கட்டுவதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்துள்ளனர். இவர்கள் அங்கேயே தங்கிக்கொண்டு கரும்பு அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kandarwakottai ,
× RELATED கந்தர்வகோட்டையில் டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை