×

கறம்பக்குடி பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்

கறம்பக்குடி, ஜன.24: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கறம்பக்குடி, கோட்டைக்காடு, வணக்கணக்காடு, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், குலத்திரான்பட்டு போன்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கறம்பக்குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அரசு அறிவிப்பின்படி நேற்று காலை முதல் மழை வரை 19ம் கட்ட மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 2634 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் 15 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karambakudy ,
× RELATED கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியில்...