×

டூவீலரில் மணல் கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது

தா.பழூர், ஜன.24: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கொள்ளிடம் ஆற்றங்கரையோரத்தில் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேரை வழிமறித்து விசாரித்ததில் அனுமதியின்றி மணல் மூட்டைகளாக மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் எஸ்ஐ சரத்குமார் வழக்குப்பதிந்து சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (60), மேலும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு