×

3வது ஞாயிறு முழு ஊரடங்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் கடைகள் அடைப்பு

பெரம்பலூர்,ஜன.24: கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட 3வது ஞா யிறு முழுஊரடங்கு. 5ஆயி ரம் கடைகள் 100 சதவீதம் மூடிக்கிடந்தன. கொரோனா வைரஸ் தொற் றுப் பரவல் 3வது அலையாக பெருகி வருவதைக் கட்டுப்படுத்த தமிழகஅரசு ஞாயி று முழு ஊரடங்கை அறிவி த்தது.இதனையொட்டி பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் (டெப்போவில்) இருந்து இயக்கப்படும் 34 டவுன்பஸ்கள், 61 மப்சல்பஸ்கள், 10 ஸ்பேர் பஸ்கள் எனமொத்தம் 105 அரசு பஸ்களும் வெளியே வராமல் முடங்கிக் கிடந்தன. 100க்கும் மேற்பட்ட மினிபஸ்கள், 50க் கும்மேற்பட்ட தனியார் பஸ்கள் ஷெட்டுகளில் முடங்கி க்கிடந்தன. பஸ் போக்குவ ரத்து இல்லாததால் பெரம்ப லூர் புதுபஸ்டாண்டு, பழை ய பஸ்டாண்டு 2ம்வெறிச் சோடிக் காணப்பட்டன. எப் போதும் பஸ்கள் மட்டுமன் றி இலகு ரக, கனரக வாக னப் போக்கு வரத்து அதிக மாகக் காணப்படும் திருச்சி -சென்னை தேசியநெடுஞ் சாலை, பெரம்பலூரிலிரு ந்து செல்லும் அரியலூர் தேசியநெடுஞ்சாலை, ஆத் தூர், துறையூர்நெடுஞ்சா லைகள் அனைத்தும் போக் குவரத்தின்றி வெறிச்சோடி க்கிடந்தன.

பெரம்பலூர் நகரில் பெரிய கடைவீதி, என்எஸ்பி ரோடு, போஸ்ட்ஆபீஸ் தெரு, பள்ளி வாசல் தெரு, காமராஜர் வ ளைவு, பழைய பஸ்டாண்டு, புது பஸ்டாண்டு, சங்குப்பே ட்டை, வெங்கடேசபுரம், வட க்கு மாதவி ரோடு, எளம்ப லூர் ரோடு, பாலக்கரை, 4 ரோடு, 3ரோடு என நகராட்சி யிலுள்ள பகுதியிலுள்ள வ ணிக வளாகங்கள், ஹோட் டல்கள், மளிகைக் கடைகள், ரெடிமேட் ஷோரூம்கள், பெ ட்டிக் கடைகள் வரை 3ஆயி ரம்கடைகள் 100சதவீதம் மூடப்பட்டிருந்தன.மேலும் வழி பாட்டுத் தலங்கள், உழவர் சந்தை,தினசரி காய்கறி மா ர்கெட், சூப்பர் மார்க்கெட்டு கள், இறைச்சிக் கூடங்கள் அனைத்தும்மூடிக்கிடந்தன. அதே போல் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான அரு ம்பாவூர், பூலாம்பாடி, லெப் பைக்குடிகாடு, குரும்பலூர், பாடாலூர்,வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, குன்னம், வி.களத்தூர், வேப்பூர், கை. களத்தூர், செட்டிக்குளம், தி ருமாந்துறை ஆகியப் பகுதி களிலும், கிராமப்புறங்களி லும் கடைகள், ஹோட்டல்க ள் அனைத்தும் என 2ஆயிர த்திற்கும் மேற்பட்ட கடைக ள் மூடிக்கிடந்தன.இதன்படி மாவட்ட அளவில் 5ஆயிரம் கடைகள் மூடிக்கிடந்தன.

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்தும் மற்ற நேரங்களில் தளர்வுகள் உடன் கூடிய இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கும் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கின் போது மருத்துவமனைகள் அவசர சிகிச்சை பகுதி மருந்துக் கடைகள் மற்றும் ஒருசில பழக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன .பொதுப் போக்குவரத்து அரசு தனியார் பேருந்து கார் ஆட்டோ போன்றவை இயங்கவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை வாரம்தோறும் இயங்கும் அரியலூர் மீன்சுருட்டி குறுக்கு ரோடு வாரச்சந்தைகள் இயங்கவில்லை. மற்ற நாட்களைப் போல இல்லாமல் அரியலூர் மாவட்டம் அமைதியாக போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. ஒரு சில நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை காரணம் கேட்டு தேவையில்லாமல் சுற்றி வந்தவர்களை போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர். மீண்டும் மீண்டும் நகரில் சுற்றி வந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற...