×

கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு

கரூர், ஜன.24: கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நுண்ணுட்ட சத்துக்கள் என்பது தாவரங்களுக்கு மிகக் குறைந்த அளவில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் ஆகும். நுண்ணுட்ட சத்துக்கள் தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, உற்பத்தி பொருட்களின் தரம், அளவு, நிறம் மற்றும் சுவை மேம்படுத்தப்படுகிறது. மேலும், பயிர்களில் நோய் எதிர்ப்பு சக்தி, உரங்களின் உள்ளீட்டு பயன்பாட்டு திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக பருத்தியில் மகரந்ததாள் உற்பத்திக்கு துத்தநாகம் முக்கியமானதாகும். நிலக்கடையின் மகசூலில் போரானின் பங்கு முக்கியமானது. பயறு வகை பயிர்களில் வேர் முடிச்சுக்ள உருவாக மாலிப்டினம் ஏதுவாக அமைகிறது. எள் செடியில் மாங்கனீசு சத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது.

வாழைப்பயிர்களில் இரும்பு சத்து குறைபாட்டால் நரம்பிடை சோகை இளம் இலைகளில் காணப்படும். அதிகமாக இந்த குறைபாடு உவர் நிலத்தில காணலாம். இந்த குறைபாட்டை தடுக்க 0.5 இரும்பு சல்பேட்டை ஒரு வார கால இடைவெளியில் இலை தெளிப்பாக தெளிக்கவும். மேலும், வாழையில் மாங்கனீசு சத்து பற்றாக்குறையால் இளம் இலைகளின் விளிம்புகளில் பசுமை சோகை காணப்படும் மற்றும் பழங்களின் மேல் ஆழ்ந்த பழுப்பு அல்லது கருப்பு நிறப்புள்ளிகள் காணப்படும். அதனை தடுக்க மாங்கனீசு சல்பேட்டை ஒரு வார கால இடைவெளியில் இலை தெளிப்பாக தெளிக்கவும்.

தென்னையில் மாங்கனீசு சத்து பற்றாக்குறையால் இலைகளின் நடுநரம்பின் இருபக்கங்களும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலையின் நுனிப்பகுதியல் இருந்து மஞ்சள் நிறம் தோன்றும். இதனை தடுக்க மெக்னீசியம் சல்பேட் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, மரம் ஒன்றுக்கு 200 மி என்ற அளவில் 6 மாத இடைவெளியில் வேர்வழி செலுத்த வேண்டும். மேலும், போரான் சத்து குறைபாட்டால் புதிதாக உருவாகும் இளம் இலைகள் சிறியதாகவும், குறும்புகள் அதிகளவில் உதிரும். இவ்வாறு அறிகுறிகள் தென்பட்ட உடன் ஒரு மரத்திற்கு 0.2 முதல் 0.5 கிலோ கிராம் வீதம் போராக்ஸினை மண்ணில் இட வேண்டும். அல்லது 0.2 போராகஸ் இலைத் தெளிப்பாக தெளிக்கலாம். இந்த பரிந்துரைகளை தனித்தனியே கடைபிடிக்கா முடியாவிட்டால், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கும் தென்னை நுண்ணுட்ட கலவையினை மண்ணில் இட்டு பயன்பெறலாம். ஒரு கிலோ நுண்ணுட்ட உரத்தில் இரும்புச் சத்து 3.8, மாங்கனீசு சத்து 4.8, துத்தநாகம் 5, போரான் சத்து 1.6 மற்றும் தாமிரச்சத்து 0.5 அளவில் உள்ளது. ஒரு மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இதனை இடலாம். மரத்தின் அடியில் இருந்து 5 அடி தூரத்தில் வட்ட பாத்தி அமைத்து மண்ணை கொத்திவிட்டு பாத்தி முழுவதும் நுண்ணுட்ட உரத்தை தூவி பாய்ச்சவும். நுண்ணுட்ட உரத்தினை தொழு உரத்துடன் கலந்தும் இடலாம். இவ்வாறு இடுவதன் மூலம் நுண்ணுட்ட சத்து பற்றாக்குறையால் ஏற்படும் மகசூல் இழப்பினை தடுக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karur District ,Joint Director of Agriculture ,Sivasubramanian ,
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை