கோவில்பட்டியில் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சிறப்பு பஸ் சேவை

கோவில்பட்டி, ஜன. 24: கோவில்பட்டி  வித்யபிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிக்கு மாணவர்களின்  நலன் கருதி பஸ் வசதி செய்துதரக் கோரி தலைமையாசிரியர் உள்ளிட்ட  ஆசிரியர்கள், யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் ஆர்டிஓவிடம்  கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், ஆர்டிஓ மேற்கொண்ட முயற்சியை அடுத்து நேஷனல் பொறியியல் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாசலம்  தனது சொந்த செலவில் பஸ் வாங்கி கொடுத்தார். மேலும் பஸ்சின் சாவியை நேஷனல்  பொறியியல் கல்லூரி இயக்குநர் சண்முகவேல் வழங்கினார். இதைப் பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி., இப்பள்ளிக்கான சிறப்பு பஸ் சேவையை கொடியசைத்து துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், திமுக  பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், நகரச் செயலாளர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர்  முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா, யூனியன் சேர்மன் கஸ்தூரி  சுப்புராஜ், விவசாய அணி அமைப்பாளர் ராமர், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு,  பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், கோட்டாட்சியர் (பொறுப்பு)  சதீஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் சிவசங்கரன், தாசில்தார்  அமுதா, சமூக நலப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் மணிகண்டன், நகர  நீர்வளத்திட்ட தாசில்தார் ராஜ்குமார், விஏஓக்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: