மகன் துன்புறுத்துவதாக தந்தை புகார்

கடலூர், ஜன. 24: கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேசன், பெண்களின் நலன் காக்க லேடிஸ் பஸ்ட் மற்றும் முதியோர்களின் நலன் காக்க ஹலோ சீனியர் என்ற புதிய காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தினார். கடலூர் மாவட்டம் முஷ்ணத்தை சேர்ந்த தர்மலிங்கம் (75) என்பவர் ஹலோ சீனியர்ஸ் காவல் உதவி எண்ணில் தொடர்புகொண்டு, தனது மகன் தன்னிடம் இருந்து சொத்துக்களை வாங்கி கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து முஷ்ணம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரித்து தர்மலிங்கத்திடம் எந்த ஒரு பிரச்னையும் செய்யக்கூடாது என்று அவரது மகனுக்கு அறிவுரை கூறி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இதே போல கடந்த 22ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பியிடம் நேரில் புகார் மனு அளித்த விஜயலஷ்மி (31), ரகுராம்சிங் (35), பழனி (55), ரமேஷ்பாபு ஆகியோரின் புகார் மனு மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: