விருத்தாசலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய வாகனங்கள்

விருத்தாசலம், ஜன. 24: விருத்தாசலம் பகுதியில் நேற்று முழு நேர ஊரடங்கு காரணமாக பாலக்கரை, கடைவீதி, கடலூர் ரோடு, சேலம் ரோடு, ஜங்ஷன் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக ஸ்தாபனங்கள் மூடப்பட்டிருந்தது. விருத்தாசலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று விருத்தாசலத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் திருமணம் நடைபெற்றதால் திருமண நிகழ்ச்சிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சென்றனர். இதன் காரணமாக அதிக அளவிலான வாகனங்கள்  விருத்தாசலம் பகுதியில் இயங்கின.மேலும் அனுமதி இல்லாத டிராக்டர்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வாகனங்களும் இயங்கின. போலீசாரின் கெடுபிடி இல்லாத காரணத்தால் இந்த அளவிற்கு வாகனங்கள் இயங்கியதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: