×

ஊரடங்கை பயன்படுத்தி பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலம், ஜன. 24: விருத்தாசலம் நகரத்துக்கு தினமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக இங்குள்ள பேருந்து நிலையத்தை பயன்படுத்தி ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி கடைகள் மற்றும் தேவையற்ற  மண்மேடுகள், சிமெண்ட் கட்டைகள் போக்குவரத்துக்கும், பயணிகளுக்கும் இடையூறாக இருந்து வந்தது. இதனால் அவைகளை அகற்றும் பணிகளை நகராட்சி ஆணையர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான நகராட்சியினர் ஈடுபட்டனர். அதற்கான நடவடிக்கைகளை கடந்த 21ம் தேதி மேற்கொண்டபோது, பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் தெரிவித்து பலர் தடுத்து வந்தனர். இதனால் அப்பணிகளை பாதியில் நிறுத்தி விட்டு, நேற்று ஊரடங்கின் போது மீண்டும் தொடக்கப்பட்டது.அப்போது 3 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 5க்கும் மேற்பட்ட லாரிகளை பயன்படுத்தி அனைத்து ஆக்கிரமிப்புகள் முழுவதும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.  மேலும் இதே போன்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின்போதிலும் நகராட்சியின் நீண்டகால பிரச்னைகள் சரி செய்யப்படும் என நகராட்சி ஆணையர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்தார்.இதில் நகராட்சி இளநிலை பொறியாளர் ராமன், வருவாய் ஆய்வர் மணிவண்ணன் மற்றும் நகராட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு