உதவி எண்ணுக்கு இளம்பெண் புகார்

கடலூர், ஜன. 24: கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேசன், பெண்களின் நலன் காக்க லேடிஸ் பஸ்ட் மற்றும் முதியோர்களின் நலன் காக்க ஹலோ சீனியர் என்ற புதிய காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தினார். இந்த காவல் உதவி எண்களுக்கு வரும் புகார்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த 22 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த ‌நபரின் நடவடிக்கை சரியில்லை என தெரிந்து, அந்த பெண் அந்த நபரிடம் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் அந்த நபர் அடிக்கடி செல்போனில் தொந்தரவு செய்ததால் அந்த பெண் லேடிஸ் பஸ்ட் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் கொடுத்ததன்பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், இருதரப்பினரையும் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு, இனிமேல் அந்த பெண்ணுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்று சமாதானமாக பேசி, அந்த நபரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரை வழங்கி, பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

Related Stories: