கடலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 81,741 பேருக்கு தடுப்பூசி

கடலூர், ஜன. 24: கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 81,471 பேருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 19வது மெகா தடுப்பூசி முகாம் 815 மையங்களில் நடைபெற்றது. 1.15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கியமான பகுதிகளில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், மொத்தம் 81,741 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இது 70 சதவீதமாகும். 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 543 பேர் முதல் தவணையையும், 80,468 பேர் இரண்டாம் தவணையையும் செலுத்திக் கொண்டனர். மேலும், 499 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். 15 முதல் 18 வயதிற்குட்பட்டோரில் 231 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39,45,635 ஆக உள்ளது. இவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 22.64 லட்சம் பேரும், இரண்டாம் தவணையை 16.77 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டனர். பூஸ்டர் தடுப்பூசியை 4,677 பேரும் செலுத்தி கொண்டனர்.

Related Stories: