×

சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறை

சேத்தியாத்தோப்பு, ஜன. 24: சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. நகரின் மக்கள் தொகை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் பணிநிரந்தரம் இல்லாமல் டிராக்டர் டிரைவர் உட்பட 5 பேர் ஆண்டு கணக்கில் பணியாற்றி வருகின்றனர். எப்படியாவது அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யாதா என்ற நம்பிக்கையின்பேரில் பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர டெங்கு பணியாளர்கள் 10 பேர் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தங்களின் நிலைகருதி வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சி சிறப்புநிலை பேரூராட்சியாக உள்ளதாலும், நகரின் எல்லை விரிவடைந்து வருவதாலும், மக்கள்தொகை எண்ணிக்கையை கருத்தில் கொண்டு முன்பு பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Sethiyathoppu ,
× RELATED சேத்தியாத்தோப்பு பழைய பாலத்தின்...