நல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

வேப்பூர், ஜன. 24: வேப்பூர் அடுத்த நல்லூர் ஊராட்சியில் சிறப்பு சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா தலைமையில் நடந்தது. வட்டார வள அலுவலர் காத்தமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஊராட்சி செயலாளர்  திருநீலமணிகண்டன் 2022ம் ஆண்டில் ஊராட்சி சார்பில் செயல்படுத்த உள்ள பணிகள் குறித்தும், ஏற்கனவே 2021ல் செயல்படுத்திய பணிகளின் செயல்பாடுகள், அதன் வரவு, செலவு விபரங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.  இதில் நல்லூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுவினர், விவசாயிகள் கலந்து கொண்டு நல்லூர் ஊராட்சியில் மேற்கொண்டுள்ள திட்டப்பணிகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தனர்.

Related Stories: