×

பனியன் தொழிலை பாதுகாக்க கோரி பாஜவினர் உண்ணாவிரதம்

திருப்பூர், ஜன. 22:  திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் கட்டிங், அயர்னிங், டைலரிங், பேக்கிங், செக்கிங், நிட்டிங், சிங்கர், கைமடித்தல், டேமேஜ், அடுக்குதல், லோக்கல் மெஷின் ஆகிய பிரிவுகளில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அபரிதமான நூல் விலை உயர்வால், தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பனியன் தொழிலை பாதுகாக்கவும், தொழில்துறைக்கு தேவையான நூல், பருத்தி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கக்கோரியும், பாஜ சார்பில் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. திருப்பூரில் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அவிநாசி ரோடு இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி எந்நேரமும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். பாஜக.,வினரின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வாகனங்களில் வந்தவர்கள், தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags : BJP ,
× RELATED கட்சியை கபளீகரம் செய்யும் பாஜக கிராமம் கிராமமாக செல்ல எடப்பாடி முடிவு