×

குர்லா, இன்டர்சிட்டி வழித்தடம் மாற்றம்

திருப்பூர், ஜன. 22:  சேலம் அடுத்த, ஓமலுார்-மேட்டூர் அணை இடையே பொறியியல் மேம்பாட்டு பணி, தண்டவாளம், சிக்னல் மாற்றும் பணி நடக்கிறது. இதனால், கோவையில் இருந்து மும்பை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் வரும் 24ம் தேதி சேலத்தில் இருந்து தர்மபுரி, ஓசூர் செல்லாது. சேலத்தில் இருந்து குப்பம், பங்காருபேட், கிருஷ்ணராஜபுரம் வழியாக கர்நாடகாவுக்கு பயணிக்கும். இந்தாண்டு மார்ச் 24ம் தேதி எர்ணாகுளம் - பெங்களூரூ ரயில் இரு மார்க்கத்திலும் தர்மபுரி, ஓசூர் செல்லாமல், பங்காருபேட் வழியாகவே பயணிக்கும். இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Kurla ,
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...