உச்சிப்புளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பயிற்சி

ராமநாதபுரம், ஜன. 22:   மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம், உச்சிப்புளி துவக்கப்பள்ளிகளில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. ஒரு விரல் என்ற இல்லம் தேடி கல்வி மைய பாடல் பாடிய மாணவியருக்கு திருக்குறள்புத்தகம், பாடல் பயிற்றுவித்த தன்னார்வலருக்கு அக்னிச்சிறகுகள் புத்தகம் வழங்கி இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் இளம் பகவத் பாராட்டினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் வீர ஜோதி, சிவக்குமார், இன்பராஜ், ஜேம்ஸ், ஜெயசெல்வி, மகேஸ்வரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். எளிய அறிவியல் சோதனைகள், புதிர் கணக்குகள், குழந்தை பாடல்கள், கோலாட்டம், கும்மி, விளையாட்டு வழி கற்றல் பயிற்சி நடந்தது. இதில் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, வட்டார  கல்வி அலுவலர்கள் சூசை, மீனாட்சி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா, ஊடக ஆவண அலுவலர் பாஸ்கரன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் லியோன், தனசேகர், வட்டார கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ததேயு ராஜ், ஜான் கென்னடி, பனைக்குளம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆரோக்கியசாமி மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

Related Stories: