காரில் புகையிலைகடத்திய 3 பேர் கைது

திருமங்கலம், ஜன.22: கள்ளிக்குடி தனிப்படை போலீசார் பழனிவேலு மற்றும் போலீசார் கள்ளிக்குடி - டி.கல்லுப்பட்டி ரோட்டில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்னர். அப்போது பேரையூரிலிருந்து கள்ளிக்குடி நோக்கி வந்த காரை பள்ளப்பசேரி விலக்கு அருகே நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட 64 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் புகையிலை பொருள்களை ஏற்றி பேரையூரைச் சேர்ந்த சக்திவேலு(56), அவரது மகன் பொன்ராஜேந்திரபிரசாத்(26), கார் டிரைவர் ராம்(22) ஆகியோரை கைது செய்தனர். இதை கள்ளிக்குடி பகுதியில் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. புகையிலை பொருள்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: