தினமும் 4,500 பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு, ஜன. 22:  ஈரோடு மாவட்டத்தில் தினமும் 4,500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ம் அலையின்போது அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 1,700 வரை பதிவானது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறியும் வகையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு அதிகரித்ததையடுத்து தினமும் 10 ஆயிரம் வரையிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் தற்போது தினமும் 4 ஆயிரம் முதல் 4,500 கொரோனா பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 25 லட்சத்து 43 ஆயிரம்  பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: