மூதாட்டி தற்கொலை

ஈரோடு, ஜன.22:  கோபி கள்ளன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த பச்சியண்ணன் மனைவி லட்சுமி (67). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்திற்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை தின்று மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர், லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: