பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முதல் வெட்டூர்ணிமடம் வரை ₹2 கோடியில் சாலை விரிவாக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், ஜன. 22: பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ஜங்ஷன் முதல் வெட்டூர்ணிமடம் வரை ₹2 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியை கலெக்டர் நேற்று தொடங்கி வைத்தார்.நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ₹26 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி ஜங்ஷன் முதல் வெட்டூர்ணிமடம் வரை சாலையை  விரிவுப்படுத்தி, இரு புறமும் நடைபாதை அமைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இந்த சாலையை விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக ₹2 ேகாடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இருபுறமும் நடைபாதை, அலங்கார விளக்குகளும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  சாலை விரிவாக்கும்  பணியை கலெக்டர் அரவிந்த்  நேற்று காலை தொடங்கி வைத்தார்.  பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறை வழங்கினார். நாகர்கோவிலில் டதிபள்ளி பகுதியில் ₹1.50 கோடி செலவில் நகரை அழகுபடுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதியுடன் சாலை விரிவாக்கம் செய்யும் பணியையும் தொடங்கி வைத்து கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

  நாகர்கோவில் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்பு பணியை நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அரவிந்த் ₹4 கோடி செலவில் 34 சாலை பணிகளை தொடங்கி வைத்தார். சுசீந்திரம் பெரிய குளத்தை மேம்படுத்துவது தொடர்பாக கலெக்டர் அரவிந்த் வனத்துறை அதிகாரி இளையராஜா, ஆணையர் ஆஷா அஜித், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் நேரில் சென்று ஆலோசனை நடத்தினார்.அப்போது குளத்தில்  பரக்கின்கால் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குளத்தை சுற்றி குப்பைகள் கொட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர்  உத்தரவிட்டார். குளத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

Related Stories: