பண்ருட்டி, திட்டக்குடி தாசில்தார் பொறுப்பேற்பு

திட்டக்குடி, ஜன. 22: திட்டக்குடி தாசில்தாராக பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து முஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த கார்த்திக், திட்டக்குடி தாசில்தாராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு திட்டக்குடி சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார் முருகன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலக

ஊழியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பண்ருட்டி: பண்ருட்டி தாசில்தாராக பணிபுரிந்த பிரகாஷ் பணி மாறுதல் காரணமாக கடலூர் சமூக நலத்திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டார்.

இதையடுத்து பண்ருட்டிக்கு புதிய தாசில்தாராக விருத்தாசலத்தில் கலால் தாசில்தாராக இருந்த கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். நேற்று புதிய தாசில்தாராக பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கார்த்திகேயன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து அறிவுரைகள் பெற்றார்.

Related Stories: