×

பண்ருட்டியில் சிபிஐ சாலை மறியல்

பண்ருட்டி, ஜன. 22: விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் காலதாமதம், சேதமடைந்த சாலை ஆகியவற்றை சீரமைக்காத காரணத்தால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத தேசிய நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்தும் சிபிஐ கட்சி சார்பில்  நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதில் ஒன்றிய குழு தனபால், மாவட்ட செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் ஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கண்டரகோட்டையில் முன்னாள் மாவட்ட குழு சிவக்குமார், துணை செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காடாம்புலியூரில் ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் 42 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags : CBI ,Panruti ,
× RELATED ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம் லாலு வீடுகளில் சிபிஐ சோதனை