×

தீபாவளி சீட்டு நடத்தி ₹47 லட்சம் மோசடி

கடலூர், ஜன. 22: கடலூரில் தீபாவளி சீட்டு நடத்தி, ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்கள் மீது, கடலூர் எஸ்.பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.கடரலூர் முதுநகர் செல்லங்குப்பம், வில்வநகர், காரைக்காடு பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கடலூர் குண்டுசாலையை சேர்ந்த 2 பெண்களிடம், 100க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் தீபாவளி பண்டு சீட்டில் சேர்த்துவிட்டோம். மாத தவணையாக ரூ.1,300, ரூ.1,000 என 12 மாதங்கள் கட்டினோம். மொத்தம் ரூ.47 லட்சத்து 16 ஆயிரத்து 800 கட்டினோம். ஆனால், அந்த பணத்தை, திருப்பி கேட்டபோது, அவர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கொடுத்துள்ளதாகவும், அதை பெற்று தருவதாகவும் கூறினர்.

இந்நிலையில் குண்டுசாலையை சேர்ந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இதையடுத்து நாங்கள் பணத்தை திருப்பி கேட்ட போது பணத்தை காலிமனையை விற்று தருவதாக கூறினர். ஆனால் இதுவரை பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
எனவே எங்கள் பணத்தை அவர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Diwali ,
× RELATED தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு நடத்தி ரூ.4.5...