×

வெளிநாடு அனுப்புவதாக கூறி ₹4.60 லட்சம் மோசடி

விருத்தாசலம், ஜன. 22: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(31). இவர் விருத்தாசலம் பெரியார்நகரில் ஏர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.இவரிடம், தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த தழதிருவாசல் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யன்(47) என்பவர், வெளிநாடு செல்வதற்காக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துள்ளார்.அதேபோல், ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த மணி(29) என்பவர் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து வெகு நாட்களாகியும் வெளிநாடு அனுப்பாமல் இருவரையும் பிரபாகரன் ஏமாற்றி வந்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், பிரபாகரன் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Tags :
× RELATED ஏழுமலையானை தரிசிக்க 40 நிமிடத்தில் 4.60 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு