×

குறிப்பிட்ட தேதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோட்டாட்சியரிடம் கவுன்சிலர்கள் மனு

விருத்தாசலம், ஜன. 22: விருத்தாசலம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் திமுக, அதிமுக, பாமக, சுயேட்சை உள்ளிட்ட 15 கவுன்சிலர்கள், கடந்த மாதம் 29ம் தேதி ஒன்றிய சேர்மன் செல்லதுரை மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில், வரும் 24ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பு தேதி குறிப்பிடாமல், தள்ளி வைத்துள்ளதாக அனைத்து கவுன்சிலர்களுக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், 7 ஒன்றிய கவுன்சிலர்கள் நேற்று மீண்டும் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், திட்டமிட்ட தேதியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில், 20 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி வாக்கெடுப்பு நடத்தலாம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளும் ஒன்றிய கவுன்சிலர்கள், பரிசோதனை செய்த பின்பு அவர்களை அனுமதிக்கலாம்.குறிப்பிட்ட தேதியில் வாக்கெடுப்பு நடத்தாவிட்டால், ஒன்றிய கவுன்சிலர்கள், அவர்களது பகுதியில் உள்ள பொது மக்களை அழைத்து வந்து ஒன்றிய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட போவதாக குறிப்பிட்டிருந்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags : Kottayam ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண்...