×

இயந்திரம் மூலம் சம்பா அறுவடை பணி முத்துப்பேட்டை அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

முத்துப்பேட்டை,ஜன.22: முத்துப்பேட்டை அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வெள்ளாந்தாங்கிதிடல் எஸ்ஜிஎம் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் கேசவன் (46). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தவர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கேசவன் வீட்டின் பின்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல்அறிந்து அங்கு சென்ற எடையூர் போலீசார் கேசவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட கேசவனுக்கு ஆட்சியம்மாள் (40) என்ற மனைவியும், ஹேமபிரியா (20) என்ற மகளும், கபிலன் (16) என்ற மகனும் உள்ளனர்.


Tags :
× RELATED திருத்தணி ஆர்.கே. பேட்டையில்...