×

பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா

பட்டுக்கோட்டை, ஜன.22: கொரோனா மூன்றாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியிலும் கடந்த 20 நாட்களாக தொற்று வேகமாக பரவி வருகிறது.நேற்று பட்டுக்கோட்டை நேருநகரை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவருக்கும், ராஜபாளையம் தெருவை சேர்ந்த 13 வயதுடைய ஆண் ஒருவருக்கும், முத்துப்பேட்டைரோட்டை சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவருக்கும், என்.ஆர்.கார்டன் கரிக்காடு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவருக்கும், ஆர்.வி.நகர் 2வது தெருவை சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு நேற்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து நகராட்சி சுகாதார அலுவலர் நெடுமாறன், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ஆரோக்கியசாமி ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதி முழுவதையும் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

கடந்த 20 நாட்களில் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் நேற்று தொற்று பாதிக்கப்பட்ட 5 பேரையும் சேர்த்து 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, இதில் 78 பேர் குணமடைந்துள்ளனர். 59 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும், பட்டுக்கோட்டை கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் 9 பேரும், டாக்டர்கள் அறிவுரைப்படி அவரவர் வீடுகளில் 32 பேரும் ஆக மொத்தம் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தொற்று பாதிக்கப்பட்ட 5 பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிய கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,Pattukkottai municipal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...