×

பாப்பாநாட்டில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 11 போலீஸ்காரர்களுக்கு கொரோனா

ஒரத்தநாடு,ஜன.22: பாப்பாநாடு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 11 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக காவல்நிலையத்திற்கு எதிரே தகர கொட்டகை அமைத்து அதில் செயல்பட்டு வருகிறது.தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்ளிட்ட 9 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து தொற்று கண்டறியப்பட்ட போலீசார் அனைவரும் டாக்டரின் அறிவுறுத்தலின்படி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, பாப்பாநாடு போலீஸ் நிலையம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அந்த பகுதி நோய் தொற்று பாதிப்புள்ள, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

இதனால் போலீசார், போலீஸ் நிலையத்தின் எதிரே திறந்த வெளியில் மரத்தடியில் மேஜை நாற்காலிகளை போட்டு பணிகளை செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு எதிரே தற்காலிகமாக (தகரசீட்) கொட்டகை அமைத்து போலீசார் அங்கிருந்து பணிகளை செய்து வருகின்றனர்.இதேபோல் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், தாலுகா இன்ஸ்பெக்டர் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஒருவர் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags : Corona ,Pappanad ,
× RELATED கொரோனாவை வெல்லுமா வீட்டு வைத்தியம்?!