×

வேளாண் அதிகாரி ஆலோசனை துறை ஆணையர் பங்கேற்பு புதுகை மாவட்டத்தில் புதிதாக 234 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை, ஜன.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 234 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்றிய வாரியாக தடுப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தினசரி கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசிகளை போட்டுவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று 234 பேருக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Pudukai district ,Commissioner of ,Agriculture Officer Advisory Department ,
× RELATED கொரோனாவை வெல்லுமா வீட்டு வைத்தியம்?!