×

நகராட்சிக்கு வரி செலுத்தாவிடில் கடும் நடவடிக்கை

புதுக்கோட்டை, ஜன.22: புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுக்கோட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை வைப்புத்தொகை மற்றும் கடை வாடகை ஆகியவற்றை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும். வரி மற்றும் கட்டணம் செலுத்தாதவர்களிடம் 3 நாட்களுக்குள் செலுத்த கோரி அவகாச அறிவிப்பை நகராட்சி அலுவலர்களால் நேரில் வழங்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையினை உடனடியாக செலுத்தப்பட வேண்டும். செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் நகராட்சி கடைகளை குத்தகைக்கு எடுத்து குத்தகை தொகை செலுத்தாதவர்கள் கடை உரிமம் ரத்து செய்வது, கடைகளை பூட்டி சீல் வைக்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சொத்துவரி செலுத்தாதவர்களின் மீது நீதிமன்றம் மூலம் மேல் நடவடிக்கைகள் தொடரப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED குளித்தலையில் ஏடிஎம் முன்பு சிமெண்ட் சிலாப் உடைந்து சேதம்