×

அரியலூர் அருகே பெண் டாக்டர் உள்பட 2 பேர் மீது மிளகாய் பொடி வீச்சு

செந்துறை,ஜன.22: அரியலூர் அருகே பெண் டாக்டர் உள்பட 2 பேர் மீது மிளகாய் பொடி வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த வடக்கு இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (35). அரியலூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் பணிமுடிந்து வீட்டுக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது இரும்புலிக்குறிச்சி அருகேயுள்ள வெண்ணங்குறிச்சி பகுதியில் சென்ற போது அவ்வழியே மற்றொரு அதிவேகமாக பைக்கில் வந்த 2 பேர், புகழேந்தி மீது மிளகாய்பொடியை தூவிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதேபோல், கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த பழனி மகள் பிரியா (30). செந்துறையில் குமிழியம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் பணி முடிந்து ஸ்கூட்டியில் செந்துறை சென்றபோது, ஆனந்தவாடி பிரிவு சாலை அருகே எதிர்திசையில் பைக்கில் வந்த 2 பேர், பிரியா மீது மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர். இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகழேந்தி மற்றும் பிரியா இருவரும் தனித்தனியே புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Ariyalur ,
× RELATED கார் கவிழ்ந்து குழந்தை உள்பட 2 பேர் பலி