×

காலமுறை ஊதியம் வழங்க கோரி பல்நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஜன.22: காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி பெரம்பலூரில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பெரம்பலூர் துறைமங்கலம், 3 ரோடு-நான்கு ரோடு இடையே உள்ள பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு, காலமுறை ஊதியம் வழங்க கோரி, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கோபிநாத் தலைமை வகித்தார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
இதற்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிடப்பட்டது. பின்னர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய கோரி பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags :
× RELATED குளித்தலையில் ஏடிஎம் முன்பு சிமெண்ட் சிலாப் உடைந்து சேதம்