×

கஞ்சா கடத்தல், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

அரியலூர்,ஜன.22: அரியலூர் அருகே உள்ள வாலாஜாநகரம் கிழக்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரஞ்சித்குமார் (24). இவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்றார். மேலும் 24ம் தேதியன்று அரியலூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜா மகன் குணசேகரன் (28) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.250 வழிப்பறி செய்தார். இதுகுறித்து அரியலூர் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார். இச்சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் அலாவுதீன், டிஎஸ்பி மதன்குமார், எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரையின் பேரில் ரஞ்சித்குமாரை ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.

Tags :
× RELATED வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு