கார் மீது பைக் மோதி 3 பேர் காயம்

குளித்தலை, ஜன.22:     திருச்சி  மாவட்டம் முசிறி தாலுக்கா தாத்தையங்கார்பேட்டை அடுத்த பில்லாதுறை  பகுதியை சேர்ந்தவர் வேம்படி மகன் வேல்முருகன் (39). இவர் கடந்த 18ஆம் தேதி  இரு சக்கர வாகனத்தில் தனது மனைவி, மகளுடன் வீரப்பூர்  கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது  மயிலாடி இரட்டை வாய்க்கால்  பாலம் அருகே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்தபோது அவருக்கு முன்னால்  சென்ற ஓம்னி கார் திடீரென பிரேக் போட்டதால் கார் பின்னால் பைக் மோதியதில்  வேல்முருகன் மற்றும் மனைவி கோமலேஸ்வரி (34), பிரித்தினா (8) ஆகிய மூன்று  பேருக்கும் காயம் அடைந்து. திருச்சி தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேல்முருகன்  அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: