ரயிலில் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

திருவள்ளூர்: : ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக  குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் டில்லிபாபு மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் பையை சோதனை செய்தபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்தனர். விசாரணையில், ஒடிசாவை சேர்ந்த பத்மனாபோயி, தனஞ்ஜெய கரியா, ஹரி ஹர பாகா என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளான தர்மபுரி, திருப்பூர், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: