பைக் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

காஞ்சிபுரம்: சென்னை தாம்பரம், மோதிலால் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). தனியார் கம்பெனி ஊழியர். இவரது உறவினர் தாம்பரம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த  அருளரசன் (27).நேற்று முன்தினம் சதீஷ்குமார், அருளரசனுடன், வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டார். காஞ்சிபுரம் அடுத்த சின்னையன்சத்திரம் பகுதியில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி, பைக்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் இறந்தார். இதற்கிடையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருளரசனும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய லாரியை வலைவீசி தேடி வருகிறார்.

Related Stories: