×

சாலையில் வீசப்பட்ட காலாவதி மாத்திரைகள்: கண்டு கொள்ளாத சுகாதாரத்துறையினர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கோதண்டராமர் கோயில் தெருவில் 100க்கு மேற்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், தினமும் அத்தியாவசிய தேவைக்கு அதிகாலையில் எழுந்து கடைக்கு செல்வது வழக்கம். இந்தவேளையில், நேற்று காலையில், கோதண்டராமர் கோயில் அருகே ஒரு வீட்டின் வெளிபுறம் மூட்டைகள் இருந்தன. இதை பார்த்த மக்கள், தேவையில்லாத பொருட்களை, யாராவது போட்டு இருப்பார்கள் என நினைத்தனர்.பின்னர், அப்பகுதியில் உணவுதேடி, வந்த நாய்கள் மற்றும் மாடுகள் அந்த மூட்டைகளை இழுத்து சாலையில் வீசின. அதை  கிளறி பிரித்தபோது, அதில் இருந்தவை  அனைத்தும் காலாவதியான மாத்திரைகள் என தெரிந்தது. இதை பார்த்ததும், பொதமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி உடனடியாக சுகாதார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், யாரும் அங்கு சென்று, காலாவதியான மாத்திரையை கைப்பற்றி கொண்டு செல்லவில்லை.

 இந்த மாத்திரைகள் மருந்தகங்களில்  காலாவதி ஆனதால், சாலையில் கொண்டு வந்து வீசப்பட்டதா, மர்மநபர்கள் மருந்தகங்களில் திருடி,  சாலையில் வீசிவிட்டு சென்றனரா, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளா, போதை மாத்திரைகளா என்பது மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வுக்கு பின்புதான் தெரியவரும்.  ஆனால், சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...